பிலிக்கல்பாளையம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
பிலிக்கல்பாளையம் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், பிலிக்கல்பாளையம் அருகே உள்ள குன்னத்தூர், கொரங்காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (27), விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்த நந்தினி (22) என்பவரை காதலித்து வந்த சுப்பிரமணியன் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு அவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒன்றரை வயதில் சுதர்சன் என்ற குழந்தை உள்ளது.
சுப்பிரமணிக்கும், நந்தினிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினையால் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தியடைந்த நந்தினி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
மயக்கமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நந்தினி உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நந்தினிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால், அவரது தற்கொலை குறித்து திருச்செங்கோடு சப்-கலெக்டர் இளவரசி விசாரணை நடத்தி வருகிறார்.