மகன் வேலைக்கு செல்லாததால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை
மகன் வேலைக்கு செல்லாததால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, சோழசிராமணி அருகே உள்ள பொன்னம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (54). கட்டிட மேஸ்திரி. இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது இளைய மகன் தினேஷ் மது அருந்திவிட்டு வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மது அருந்தக் கூடாது என்ற மகன் தினேஷை மாரிமுத்து கண்டித்துள்ளார். அதனை கேட்காமல் தினேஷ் தொடர்ந்து மது அருந்தி வந்ததால் மனமுடைந்த மாரிமுத்து வீட்டில் இருந்த நைலான் கயிறால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதைக்கண்டு குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.