பரமத்திவேலூரில் அரசு பஸ்சில் தங்க நகை திருடிய 3 பெண்கள் கைது

அரசு பஸ்சில் சென்ற பெண்ணிடம் நூதன முறையில் தங்க நகை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-05-09 02:30 GMT

பைல் படம்.

சேலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு செல்லும் அரசு பஸ்சில், பெண் ஒருவர் தனது மகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். பரமத்தி வேலூர் நகரில், மோகனூர் ரோடு பஸ் ஸ்டால் அருகே பஸ் வந்தபோது அந்தப் பெண் தனது கைப்பையில் வைத்திருந்த 5 பவுன் நகைகளை காணவில்லை என கூறி கதறி அழுதார்.

இதைக்கண்ட பஸ் கண்டக்டர், சற்று முன் அந்த பஸ் ஸ்டாப்பில் பஸ்சில் இருந்து இறங்கிய 3 பெண்கள் மீது சந்தேகப்பட்டு பஸ்சை நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கிய பெண்களை பிடிப்பதற்காக பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார். அதற்குள் அந்தப் பெண்கள் கையில் வைத்தவிருந்த நகைகளை கீழே போட்டுவிட்டு, எதுவும் தெரியாதது போல் நின்றுகொண்டிருந்தனர். கீழே கிடந்த நகைகளை எடுத்த கண்டக்டர் அருகில் இருந்து பொதுமக்களிடம், அந்த 3 பெண்களும் பஸ்சில் இருந்த பெண்ணிடம் நகைகளை திருடிக்கொண்டு பஸ்சில் இருந்து 3 பெண்களும் இறங்கிவிட்டதாக கூறினார். 3 பெண்கள் கீழே போட்ட தங்க நகையை, பஸ்சில் இருந்த பெண்ணிடம் கண்டக்டர் ஒப்படைத்தார்.

நகைகளை திருடிய 3 பெண்களையும், பொதுமக்கள் பிடித்து ப.வேலூரில் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நாமக்கல் பஸ் ஸ்டேண்டில், அந்த பஸ்சில் ஏறிய 3 பெண்கள், ஏற்கனவே அமர்ந்திரு"நத பெண்ணின் அருகில் அமர்ந்து பயணம் செய்தனர். அப்போது சில்லரை காசுகளை கீழே போட்டு விட்டு அதை எடுத்து தாருங்கள் என கூறி அப்பெண்ணை திசைதிருப்பியுள்ளனர். அந்த நேரத்தில் அந்த பெண் பையில் வைத்திருந்த 5 பவுன் நகையை நைசாக திருடியதாக ஒப்புக்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் திருச்சி மாவட்டம் லால்குடி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மூர்த்தி என்பவரது மனைவி ராணி (39), மணி என்பவரது மனைவி வைதேகி (29), ரங்கா என்பவரது மனைவி ஆராதனா (28) என்பது தெரியவந்தது. நகைகளை பறிகொடுத்தவர் தனது பெயர் சாந்தாமணி (45), குருந்தம்பாடி என்பதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News