ஆடி விழாவை முன்னிட்டு நன்செய் இடையாறு மாரியம்மனுக்கு 108 சங்காபிசேகம்
பரமத்திவேலூரில், ஆடி விழாவை முன்னிட்டு நன்செய் இடையாறு மகா மாரியம்மனுக்கு 108 சங்காபிசேக விழா நடைபெற்றது.;
நன்செய் இடையாறு மகா மாரியம்மன்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு கிராமத்தில், பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோயில் உள்ளது. ஆடி விழாவை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, 108 சங்காபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட கலசத்தின் முன்பு வலம்புரி, இடம்புரி சங்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர்.