பாஜக மாநிலத் தலைவர் - சொந்த ஊருக்கு வருகை

ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.;

Update: 2021-01-24 12:50 GMT
பாஜக மாநிலத் தலைவர் - சொந்த ஊருக்கு வருகை
  • whatsapp icon

பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்று முதன்முறையாக சொந்த ஊருக்கு சென்ற எல்.முருகன், குலதெய்வ கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

நாமக்கல்லில் பாஜக சார்பில் அணிபிரிவு மாநாடு தனியார் ஓட்டலில் இன்று நடை பெற்றது. இதற்கு மாநில தலைவர் எல்.முருகன் தலைமை தாங்கினார். இந்நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு எல்.முருகன் இன்று அவரது சொந்த கிராமமான நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகாவில் உள்ள கோனூர்க்கு முதன் முறையாக வருகை புரிந்தார்.

அவருக்கு அப்பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்று உறவினர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் அப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் பா.ஜ.க கொடியினையும் அவர் ஏற்றினார். முன்னதாக புதுப்பாளையம் பகுதியில் உள்ள அவரது குலதெய்வ கோவிலான ஸ்ரீ நந்தகோபால பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

Tags:    

Similar News