பேக்கரியில் வேலை செய்த சிறுவன் திடீரென்று மயக்கமடைந்து உயிரிழப்பு

ஜேடர்பாளையம் அருகே பேக்கரியில் வேலை செய்த சிறுவன் திடீரென்று மயக்கமடைந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-04-30 00:15 GMT
பேக்கரியில் வேலை செய்த சிறுவன் திடீரென்று மயக்கமடைந்து உயிரிழப்பு

பைல் படம்.

  • whatsapp icon

ஈரோடு மாவட்டம் பாசூர் பகுதியை சேர்ந்தவர் செல்வன் (43), கூலித்தொழிலாளி. இவர் குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா சோழசிராமணி பகுதியில் தங்கி,  கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் மணிகண்டன் (19). பிளஸ் 2 படித்து விட்டு, சோழசிராமணியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு,  மணிகண்டன் பேக்கரியில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News