நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 52.12 கோடி நிதி உதவி வழங்கல்...

நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, ரூ. 52.12 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார்.

Update: 2022-12-29 08:45 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை ராஜேஷ்குமார் எம்.பி வழங்கினார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு, தமிழகத்தில் சிறந்த முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கினார். பின்னர் தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் திட்டத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.

இதையொட்டி, நாமக்கல்லில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கவுசல்யா தலைமை வகித்தார். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, நகராட்சித் தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகளிர் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கி பேசினார். நிகழ்ச்சியின்போது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 848 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 10,693 பயனாளிகளுக்கு ரூ. 52 கோடியே 12 லட்சம் வங்கிக்கடன் சுழல் நிதி வழங்கப்பட்டது.

தமிழக முதல்வரால், மாவட்ட மற்றும் மாநில அளவிலான சிறந்த சமுதாய அமைப்புகளுக்கான 2021-2022 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை. விருதுகள், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சிறந்த கிராம பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு விருதிற்கு எலச்சிபாளையம் வட்டாரம் கொன்னையார் பஞ்சாயத்து தேர்வு செய்யப்பட்டு ரூ. 3 லட்சம் விருது தொகை வழங்கப்பட்டது.

சிறந்த கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் விருதிற்கு எருமப்பட்டி வட்டாரம் கோனங்கிப்பட்டி தேர்வு செய்யப்பட்டு ரூ. 1 லட்சம் விருது தொகை வழங்கப்பட்டது. சிறந்த மகளிர் சுய உதவிக் குழுவிற்கான விருதிற்கு நாமக்கல் நகராட்சி, பேட்டை சுண்ணாம்புக்கார தெரு சுய உதவிக்குழு தேர்வு செய்யப்பட்டு ரூ. 1 லட்சம் விருது தெகை வழங்கப்பட்டது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், இணை மானியம் உற்பத்தியாளர் குழுக்களுக்கான துவக்க நிதி, உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான துவக்க நிதி. தொழிற் குழுக்களுக்கான துவக்க நிதி சமுதாயத் திறன் பள்ளிகள் அமைப்பதற்கான நிதி மற்றும் சமுதாய பண்ணைப் பள்ளிகள் அமைப்பதற்கான நிதி ரூ. 68 லட்சம் வழங்கப்பட்டது. இதன் மூயம் 3,448 பணிகள் பயன்பெறுவார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில், மகளிர் கய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்க ரூ. 653 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 6,065 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 454.32 கோடி கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News