நாமக்கல் லோக்சபா தொகுதியில் இதுவரை 19 பேர் வேட்பு மனு தாக்கல்: நாளை நிறைவு

லோக்சபா தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவு பெறுகிறது. நாமக்கல் தொகுதியில் இதுவரை 19 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2024-03-26 16:00 GMT

லோக்சபா தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவு பெறுகிறது. நாமக்கல் தொகுதியில் இதுவரை 19 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது.நாளை 27ம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுகிறது. வருகிற ஏப். 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. கடந்த, 20ம் தேதி, வேட்பு மனு தாக்கல் துவங்கியது. அன்று, அகிம்சா சோசியாலிஸ்ட் கட்சி நிறுவன தலைவர் காந்தியவாதி ரமேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, 22ம் தேதி, சுயேச்சை வேட்பாளர் செல்வராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார். 25ம் தேதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி, கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன், பாஜக வேட்பாளர் டாக்டர் ராமலிங்கம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கனிமொழி மற்றும் மற்றும் சுயேச்சைகள் என ஒரே நாளில் 12 பேர் மனு தாக்கல் செய்தனர்.

இன்று, ப.வேலூர் அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராமசாமி (67), சங்ககிரி செங்காளிகாடு புதுவளவை சேர்ந்த ரவிக்குமார் (44), இந்திய கணசங்கம் கட்சி, குமாரபாளையம் காடச்சநல்லூர் மூர்த்தி (66), மோகனூர் சுயேச்சை வேட்பாளர் வெண்ணிலா (52), நாமக்கல் சுயேச்சை வேட்பாளர் நடராஜன் (52) உள்ளிட்ட 5 பேர் வேட்பு மனுதாக்கள் செய்தனர். நாமக்கல் லோக்சபா தொகுதியில், இதுவரை 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

Tags:    

Similar News