விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு நாமக்கல்லில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு, நாமக்கல் நகரில் 2 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.;
நாமக்கல் நகரில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 31ம் தேதி பொதுமக்கள் சார்பாக சுமார் 35 இடங்களிலும், இந்து முன்னனி சார்பாக சுமார் 9 இடங்களிலும், விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் சார்பாக வழிபாடு செய்யப்படும் விநாயகர் சிலைகளை 2-ம் தேதி மோகனூர் காவேரி ஆற்றிலும், இந்து முன்னனி சார்பாக வழிபாடு செய்யப்படும் சிலைகளை 3ம் தேதிகாலை 11.30 மணியளவில் ஊர்வலமாக நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் துவங்கி,நகரின்முக்கிய ரோடுகளின் வழியாக எடுத்துச் சென்று, மோகனூர் ரோடு வழியாக, காவேரி ஆற்றுக்கு சென்று கரைக்கப்பட உள்ளது.
இந்த இரண்டு நாட்களிலும், மதுப்பிரியர்கள் மது அருந்திவிட்டு பிரச்சனையில் ஈடுபட்டால், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நாமக்கல் டவுன் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடை எண்கள். 5916, 6202, 6251 மற்றும் 6154 ஆகிய 4 கடைகளையும் 2 மற்றும்3-ம் தேதிகளில் மூட வேண்டும் öன்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையொட்டி, நகரில் எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் இல்லாமல், மோகனூர் காவேரி ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைத்திட ஏதுவாக, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ள கடை எண்கள். 5916,6202,6251 மற்றும் 6154 ஆகிய டாஸ்மாக் மதுக்கடைகளை 2, 3 ஆகிய தேதிகளில் மூடவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டுள்ளார்.