நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா: கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் கலெக்டர் உமா கலந்துகொண்டு, பள்ளிக்குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.

Update: 2024-11-14 09:15 GMT

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், கலெக்டர் உமா கலந்துகொண்டு  பள்ளிக்குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா: கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல்,

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் கலெக்டர் உமா கலந்துகொண்டு, பள்ளிக்குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் மறைந்த பிரதமர் நேரு பிறந்தநாள் விழா நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, ஜவஹர்லால் நேருவின் 136வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பள்ளிக்குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்கள் கூறி இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நாளான நவ. 14, ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளின் உரிமைகள், கல்வி மற்றும் நலன் குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூறினார். அதனைத்தொடர்ந்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இந்தியன் வங்கியின் புதிய கிளை மற்றும் புதிய ஏ.டி.எம் மையத்தை கலெக்டர் உமா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News