மாணவரை தாக்கிய சக மாணவா் கைதுசெய்யப்பட்டு சிறாா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைப்பு..!

மாணவரை தாக்கிய சக மாணவா் கைதுசெய்யப்பட்டு சிறாா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைப்பு.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;

Update: 2025-02-28 05:30 GMT

ராசிபுரம்:

ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் கவின்ராஜ் (14) என்ற மாணவர் உயிரிழந்த நிலையில், அவரை தாக்கிய மற்றொரு மாணவர் கைது செய்யப்பட்டு சிறார் சீர் திருத்தப் பள்ளிக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து அதே பள்ளியைச் சேர்ந்த சக மாணவர் கைது செய்யப்பட்டு காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார். தகராறு நடந்ததையும் அவரை தாக்கியதையும் அந்த மாணவர் ஒப்புக்கொண்டார்.

இதனிடையே, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் முருகன் அப்பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள், மாணவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தில் பள்ளி ஆசிரியர்கள் அலட்சியத்துடன் செயல்பட்டார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தினார்.

இதனிடையே, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீண்ட போராட்டத்துக்கு பின் உயிரிழந்த மாணவர் சடலத்தை பெற்றுக்கொண்ட உறவினர்கள், ராசிபுரம் கொண்டு வந்து ஊர்வலமாக சென்று இறுதி அஞ்சலி செலுத்திய பின் எரியூட்டினர்.

Tags:    

Similar News