குமாரபாளையத்தில் நேற்று பெய்த மழையால் வியாபாரிகள் கலக்கம்
Rain News -குமாரபாளையத்தில் வியாபார நேரத்தில் வந்த மழையால் வியாபாரிகள் கலக்கமடைந்தனர்.;
குமாரபாளையத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்ததால் சாலையில் மழை நீர் வெள்ளமென ஓடியது.
Rain News -குமாரபாளையம் மட்டும் சுற்றுப்புற பகுதியில் நேற்று காலை முதலே மழை மேக மூட்டமாகவும், குளிர்காற்றும் வீசி வந்தது. தீபாவளி சமயம் என்பதால் துணிக்கடை, நகைக்கடை, பேன்சி ஸ்டோர்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் காலை முதலே கூட்டம் அதிகம் காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை 04:00 மணியளவில் தொடங்கிய கன மழை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நவராத்திரி விழா அனைத்து கோவில்களில் நடைபெற்று வருவதால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல சிரமப்பட்டனர். சாலையில் மற்றும் கோம்பு பள்ளத்தில் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2