குமாரபாளையத்தில் உலக நெசவாளர்கள் தினக் கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் உலக நெசவாளர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டது.;

Update: 2023-08-07 16:45 GMT

குமாரபாளையத்தில் உலக நெசவாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சார்பாக, குமாரபாளையம் காளியம்மன் கோவில் வீதியில் இயங்கி வரும் இல்லம் தேடி கல்வி மாணவர்களுக்கு தேசிய நெசவாளர்கள் தினத்தை முன்னிட்டு மாணவர்களை கைத்தறி நெசவு கூடத்திற்கு அழைத்துச் சென்று கைத்தறி நெசவு பற்றியும் நெசவாளர்களை கௌரவிக்கும் விதமாக விடியல் ஆரம்பம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் சுகந்தி மற்றும் நெசவாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் பால்ராஜ் நெசவு தொழில் பற்றி மாணவர்களிடையே கூறினார்கள் ஒரு பட்டு சேலை நெய்வதற்கு 15 ஆயிரம் முறை கை கால்களை அசைக்க வேண்டியுள்ளது என்றும், சிறந்த ஒரு உடற்பயிற்சி என்றும் ஆடை இல்லாத மனிதன் அரை மனிதன், ஆடை அணிந்தால் மனிதனை அழகாக காட்ட இயலும் என்று விளக்கிப் பேசினர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பரமன் பாண்டியன் மற்றும் ஜல்லிக்கட்டு வினோத் ஆகியோர் நெசவுத் தொழிலை பயன்பாட்டினை மாணவர்களுக்கு விளக்கினார்கள்.

நெசவாளர்களுக்கு மாணவ மாணவிகள் நெசவு துண்டு அணிவித்து மகிழ்ந்தனர்.

இந்நிகழ்வை இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் விடியல் பிரகாஷ் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் நிகழ்வில் தீனா, ராணி, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ஜமுனா ஆகியோர் பங்கேற்றனர்.

இன்று உலக நெசவாளர்கள் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர தேவாங்கர் முன்னேற்ற பேரியிக்கத்தின் சார்பில் முதலாம்ஆண்டு நெசவாளர் தினம் கொண்டாப்பட்டது மாவட்ட செயளாலர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் புஷ்பநாதன் தலைமை வகித்தனர். இதில் நெசவாளர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

சிறப்பு அழைப்பாளர்களாக அம்பலவாணன், அண்ணார், சந்தான ஐயப்பன், தேவிமணி பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள். நிர்வாகிகள் ஜெகதீசன், சிவகுமார், ஜெயராஜ், ராஜ்குமார், முனிராஜ், சவுண்டப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News