குமாரபாளையத்தில் உலக புத்தக தின கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பாக குமாரபாளையத்தில்உலகப் புத்தக தினம் கொண்டாடப்பட்டது.;
நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் சார்பாக குமாரபாளையத்தில்உலகப் புத்தக தினம் விடியல் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.
வீதி வகுப்பறை ஏற்படுத்தி மாணவ மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு வாசிப்பு திறன் ஏற்படுத்த, புத்தகங்களில் இருந்து கதை சொல்லுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
குமாரபாளையம் பகுதிகளில் 10 இடங்களில் வாசிப்பு மையம் நடைபெற்றது. நன்றாக கதை சொன்னவர்களுக்கு விடியல் பிரகாஷ், பரிசாக புத்தகங்களை வழங்கினார்கள். புத்தகங்களின் அருமைகள் பற்றியும், வாசிப்பை பற்றியும் மாணவ மாணவிகள் பேசினார்கள். இதில் லதா, சித்ரா, தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் அரசினர் மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை ஆசிரியை சிவகாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவி வசந்தகுமாரி தலைமை வகித்தனர்.
மாதந்தோறும் நடைபெறும் கூட்டத்தின் மூலம், பள்ளிக்கு தேவையான கருத்துகளை ஏற்றுக்கொண்டு தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள். கூட்டத்தில் பங்கேற்ற இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடியல் பிரகாஷ் பேசியதாவது:
இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு பயந்து கொண்டு விடுமுறை எடுத்துக் கொண்டனர். தேர்வு அச்சத்தை நீக்கி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்கு வராத மாணவிகள் பெற்றோருக்கு தொலைபேசி வாயிலாக பேசி மாணவிகளை தேர்வு அனுப்ப வேண்டுமாய் கேட்டுக் கொண்டோம். மேலும் அவர்கள் வீட்டுக்குச் சென்று மாணவிகளை ஊக்கப்படுத்தி தேர்வு எழுதி வைக்க அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கி நாளை முதல் அவர்கள் வீட்டுக்கு சென்று தேர்வு எழுத அழைத்து வர முடிவு செய்யப்பட்டது என்று கூறினார்.
இதில் ஆசிரிய பெருமக்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளை மாற்றும் விதமாக பள்ளிக்கல்வித்துறையின் புதிய முயற்சிகைள முன்னெடுத்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தமிழகத்தில் மாதிரி பள்ளிகள் மற்றும் தகைசால் பள்ளிகள் தொடங்கப்படும் திட்டத்தை துவக்கி வைத்தனர்.
அதன்படி 26 தகை சால் பள்ளிகளும் 15 மாதிரி பள்ளிகளும் புதிதாக தொடங்கப்பட உள்ளன. நடப்பு கல்வியாண்டு முதலே இந்த இரண்டு வகை பள்ளிகள் தமிழகத்தில் செயல்பட உள்ளது. ஆயிரத்திற்கும் மேல் மாணவர்கள் கொண்ட அரசு பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக மாற்றப்படுகின்றன. அந்த வகையில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், நவீன கணினி மற்றும் அறிவியல் ஆய்வகங்கள், ஒருங்கிணைந்த நூலகம், விளையாட்டு, கலைகள், இலக்கியம் எனஅனைத்தும் சேர்ந்த ஒரு முழுமையான கல்வியை நேரிடையாகவும், இணைய வசதிகளை பயன்படுத்தியும் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்பட உள்ளது.
ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு மாணவர்கள் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டு அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயர்த்துகின்ற வகையில் தகைசால் பள்ளிகள் ஏற்ப்படுத்தப்படும்.
அதன்படி முதற்கட்டமாக திருவள்ளூர் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், தருமபுரி,சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல்ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள 1000த்துக்கும் மேல் மாணவர் எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தகைசால் பள்ளிகளாக மாற்றப்பட உள்ளது.
உண்டு உறைவிட வசதியுடன் மாதிரிப்பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது. 10ம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மாதிரிப்பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். 10ம் வகுப்பு மதிப்பெண் தவிர்த்து NTSE என்ற தேசிய திறனறிவுத்தேர்வு, NMMS எனப்படும் தேசிய வருவாய் வழித்தேர்வு, விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களும் மாதிரிப்பள்ளிகளில் சேருவதற்குரிய தகுதியாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள்