குமாரபாளையத்தில் மகளிர்தின விழா
குமாரபாளையத்தில் மகளிர் தினவிழா கேக் வெட்டி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளி சார்பில் கொண்டாடப்பட்ட மகளிர் தினவிழாவில் குமாரபாளையம் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மாலதி உள்பட பலர் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ரிலையன்ஸ் பள்ளி சார்பில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் பிரின்சி மெர்லின் தலைமை வகித்தார். மகளிர் தினத்தையொட்டி , குமாரபாளையம் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மாலதி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பூங்குழலி, எஸ்.ஐ. சந்தியா, கல்லங்காட்டுவலசு அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செந்தாமரைச்செல்வி ஆகியோருக்கு, அவரவர் அலுவலகத்தில் நேரில் சென்று, சால்வை, மாலைகள் அணிவித்தும், கேக் வெட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் ரவி, பள்ளி நிர்வாகிகள், ஆசிரியைகள் பெருமளவில் பங்கேற்றனர்.
குமாரபாளையம் அரசு பி.எட். .கல்லூரியில் முதல்வர் ஜான் பீட்டர் தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பெண்கள் முன்னேறி விட்டார்கள் என்பது கற்பனையே, நிஜமே, என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில், ஈரோடு வாசவி கல்லூரி ஆங்கில துறை பேராசிரியை மைதிலி நடுவராக பங்கேற்று பேசினார். மாணவ, மாணவியர்கள் கலை நிகழ்சிகள் நடைபெற்றன.
மக்கள் கல்வி நிறுவனம், மகளிர் குழுவினர் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், பல்வேறு போட்டிகள் வைக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பல்வேறு சாதனைகள் புரிந்த மகளிர் கவுரப்படுத்தப்பட்டனர். நிர்வாகிகள் மகேந்திரமணி, மகாலட்சுமி, எஸ்.ஐ. மலர்விழி, சரவணன், நாராயணி உள்பட பலர் பங்கேற்றனர்.