குமாரபாளையத்தில் மாயமாகும் பெண்கள் போலீசார் தேடுதல் வேட்டை

குமாரபாளையத்தில் மாயமாகும் பெண்களை கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-12-06 15:45 GMT

காணாமல் போன மாதேஸ்வரி

குமாரபாளையத்தில்  காணாமல் போன  பெண்களை கண்டுபிடிக்கும் பணியில்  போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 

குமாரபாளையம் தம்மண்ணன் வீதியில் வசித்து வருபவர் கவுரி காஞ்சனா, 37. பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள நகராட்சி பள்ளியில் சமையல் வேலை செய்து வருகிறார். சில நாட்கள் முன்பு, வேலை முடிந்து வீட்டிற்கு வந்து, தனது மகள்கள் தேன்மொழி, 14, சவுமியா, 13, திலீப், 7, ஆகிய மூவரை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இவர்களை கண்டுபிடித்து தருமாறு, குமாரபாளையம் போலீசில் இவரது தந்தை முருகன், 60, புகார் செய்துள்ளார்.

குமாரபாளையம் மேற்கு காலனி பூங்கொடி மில் அருகே வசித்து வந்தவர் மாதேஸ்வரி, 55. அரசு பள்ளியில் சமையல் ஆயா வேலை. இவர் சில நாட்கள் முன்பு பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள அரசு பள்ளியில் சமையல் வேலை செய்து கொண்டிருக்கும் போது, தன்னுடன் வேலை செய்த காஞ்சனா என்பவரிடம், வெளியில் சென்று வருவதாக கூறி சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இவரது மகள் கவிதா, 36, காணாமல் போன தன் தாயை கண்டிபிடித்து தருமாறு குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன மாதேஸ்வரி, கவுரி காஞ்சனா, தேன்மொழி, சௌமியா, திலிப் ஆகியோரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.



Tags:    

Similar News