டூவீலர் லாரி மோதிய விபத்தில் சமையல் பெண் தொழிலாளி பலி, ஒருவர் படுகாயம்
குமாரபாளையம் அருகே டூவீலர் லாரி மோதிய விபத்தில் சமையல் பெண் தொழிலாளி பலியானதுடன் ஒருவர் படுகாயமடைந்தார்.;
குமாரபாளையம் அருகே டூவீலர் லாரி மோதிய விபத்தில் சமையல் பெண் தொழிலாளி பலியானதுடன் உடன் சென்றவர் படுகாயமடைந்தார்.
பள்ளிபாளையம் கொக்கராயன்பேட்டையை சேர்ந்தவர் பூங்கொடி, 48. சமையல் தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் மாலை 4:30 மணியளவில், சேலம் கோவை புறவழிச்சாலையில் டி.வி.எஸ். எக்ஸல் டூவீலரில் வந்த ஈரோடு குமணன்குட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி லோகநாதன், 49, வசம் கேட்டு, வழியில் இறக்கி விட சொல்லி லிப்ட் கேட்டு வண்டியில் பின்னால் உட்கார்ந்து கொண்டார்.
ராகவா மெஸ் எதிரில் வந்த போது, பின்னால் வேகமாக வந்த டிரக் லாரி இவர்கள் வந்த டூவீலர் மீது மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரையும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு அழைத்து வந்தனர். இதில் வழியில் பூங்கொடி இறந்தார். லோகநாதன் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.