வெள்ளைத்தாளை லாட்டரி சீட்டாக ஏமாற்றி விற்பனை: ஒருவர் கைது
குமாரபாளையத்தில் வெள்ளைத்தாளை லாட்டரி சீட்டு என ஏமாற்றி விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;
குமாரபாளையத்தில் வெள்ளைத்தாளை லாட்டரி சீட்டு என ஏமாற்றி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம் தம்மண்ணன் செட்டி வீதியில் போலி லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேரில் சென்ற இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட போலீசார் அங்கு வெள்ளை தாளில் நெம்பர் எழுதி லாட்டரி சீட்டு என ஏமாற்றி பொதுமக்களிடம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது போலீசார் கையும் களவுமமாக பிடித்து விசாரணை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த லோகநாதன், 77, என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து எண்கள் எழுதப்பட்ட வெள்ளை தாள்கள் 4 எண்ணிக்கை கைப்பற்றப்பட்டதுடன், அவர் கைது செய்யப்பட்டார்.