குமாரபாளையத்தில் களை கட்டிய ஜல்லிக்கட்டு போட்டி

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.;

Update: 2023-04-16 12:45 GMT

குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து போட்டிகளை துவக்கி வைத்தார்.

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ள தளத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அமைப்பாளர் வினோத்குமார் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்று கொடியசைத்து போட்டிகளை துவக்கி வைத்தார். முன்னதாக திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதி ஏற்றனர்.

நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், மாநில ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், மாவட்ட தி.மு.க. செயலர் மதுரா செந்தில், ஒன்றிய செயலர் வெப்படை செல்வராஜ், நகர தி.மு.க. செயலர் செல்வம், உள்ளிட்ட பலர் கோவில் காளைக்கு பூஜை செய்து மைதானத்தில் முதலில் ஓட விட்டனர். அதன் பின் 700க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 400க்கும் மேற்பட்ட வீரர்கள் காளைகளை அடக்கி பேன், மிக்சி, உள்ளிட்ட பரிசு பொருட்கள் பெற்றனர்.

கால்நடை மருத்துவ குழுவினர் ஒவ்வொரு காளைகளையும் பரிசோதித்து போட்டியில் பங்கேற்க வைத்தனர். மாவட்ட போலீஸ் எஸ்.பி.கலைச்செல்வன், திருச்செங்கோடு டி.எஸ்.பி. மகாலட்சுமி, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



Tags:    

Similar News