குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

குமாரபாளையத்திற்கு வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பப அளிக்கப்பட்டது

Update: 2023-05-25 03:51 GMT

குமாரபாளையத்திற்கு வந்த முன்னாள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக நிர்வாகி சுப்பிரமணி குடும்பத்தினர்

குமாரபாளையத்திற்கு வந்த முன்னாள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

குமாரபாளையம் நகர அ.தி.மு.க. செயலர் பாலசுப்ரமணி, தெற்கு காலனி பகுதியில் புதிய வீடு கட்டியுள்ளார். அதன் கிரஹபிரவேசம் இன்று நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு குமாரபாளையம் வந்தார். இவருக்கு எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் உற்சாக வரவேற்பு  அளிக்கப்பட்டது.

நகர அ.தி.மு.க. செயலர் பாலசுப்ரமணியின்  புதுமணை புகு விழாவுக்கு  வந்த எடப்பாடி பழனிச்சாமி,  பாலசுப்ரமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், கருப்பண்ணன், சரோஜா, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இவ்விழாவில் பங்கேற்க நகரின் அனைத்து வார்டு அ.தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர்.




Tags:    

Similar News