குமாரபாளையம் அருகே விநாயகர் கோயில் திருவிழா கோலாகலம்
குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு விநாயகர் கோயிலில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு விநாயகர் கோயிலில் திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் மேள தாளங்கள் முழங்க எடுத்து வரப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தவாறு வந்தார்.
இதை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற, பொங்கல் வைத்தும், முளைப்பாரி எடுத்து வந்தும் வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.