முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் : அட்டைகள் அனுப்பி வைப்பு

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டைகளை குமாரபாளையம் பா.ஜ.கவினர் அனுப்பி வைத்தனர்.;

Update: 2021-09-10 02:34 GMT

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் பா.ஜ.க. சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்து முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து அஞ்சல் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

குமாரபாளையம்:

குமாரபாளையம் பா.ஜ.க.  சார்பில் தமிழக முதல்வருக்கு ஆயிரம் கார்டுகளில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து  அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து பா.ஜ.க. நிர்வாகி வக்கீல் தங்கவேல் கூறியதாவது:

விநாயகர் சதுர்த்திக்கு பொதுமக்களுக்கு வாழ்த்து சொல்வது, தமிழக முதல்வருக்கு எப்போதும் வழக்கம் இல்லை. நாங்களாவது முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல எண்ணி ஆயிரம் அஞ்சல் அட்டைகளில் வாழ்த்துக்கள் எழுதி, அஞ்சல் செய்யும் நிகழ்வு குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் நடைபெற்றது.

நான்கு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி எவ்வாறு நடக்கிறதோ, அதே போன்று தமிழகத்திலும் நடைபெற அனுமதி வழங்க வேண்டும், வீட்டிற்குள் வைத்து விநாயகரை வழிபடுவது எப்படி என்று கூற வேண்டும், விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல  கோரிக்கைகள் கொண்ட மனு விநாயகர் சிலையுடன் அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News