குமாரபாளையத்தில் ரத்ததானம் செய்த விஜய் ரசிகர்கள்
நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, குமாரபாளையத்தில் 30-க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர்.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், நடிகர் விஜய் 47 -வது பிறந்தநாளை முன்னிட்டு, குமாரபாளையம் விஜய் மக்கள் இயக்கம் நகர இளைஞரணி தலைமை சார்பில், மாபெரும் ரத்ததான முகாம், அங்குள்ள ராமர் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த ரத்ததான முகாமை, குமாரபாளையம் காவல் ஆய்வாளர் ரவி துவக்கி வைத்தார். இதில், 30-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். இவ்விழாவில் நாமக்கல் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், மற்றும் இளைஞர் அணி, மகளிர்அணி, வர்த்தக அணி, மாணவர் அணி, விவசாய அணி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.