குமாரபாளையத்தில் நடைபெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள்

குமாரபாளையத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.;

Update: 2022-11-19 03:51 GMT

பைல் படம்.

குமாரபாளையத்தில் நடந்து சென்றவர் மீது டெம்போ மோதி கால் எலும்பு முறிவு

குமாரபாளையம் பவானி, சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம், 65. டிரைவர். இவர் நேற்று மாலை ஒரு மணியளவில் குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் பழங்கள் வாங்கிகொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் வேகமாக வந்த சரக்கு வாகனம் மோதியதில், சுந்தரத்தின் இடது கால் மீது வாகனம் ஏறி இறங்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்குபதிவு செய்த குமாரபாளையம் போலீசார் சரக்கு வாகன ஓட்டுனர் அந்தியூர், தவிட்டுபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன், 42, என்பவரை கைது செய்தனர்.

கார் மோதி சலவைத் தொழிலாளி படுகாயம்

குமாரபாளையம் எதிர்மேடு வாத்தியார் தோட்டம் பகுதியில் வசிப்பவர் மகிமைநாதன், 72. சலவை தொழிலாளி. நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில் சேலம், கோவை புறவழிச்சாலை எதிர்மேடு பகுதியில் சாலையை நடந்து கடக்கும் போது, கோவை பக்கமிருந்து வேகமாக வந்த ச்வேப்ட் கார் மோதியதில், மகிமைநாதன் படுகாயமடைந்தார். இவர் குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளார். குமாரபாளையம் போலீசார் இது குறித்து வழக்குபதிவு செய்து கார் ஓட்டுனர் பெங்களூரை சேர்ந்த அபினாஷ், 27, என்பவரை கைது செய்தனர்.

டூவீலர் மீது ஆட்டோ மோதி ஒருவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே மேட்டுக்கடை ஜீவா நகர் பகுதியில் வசிப்பவர் முருகன், 55. கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை 08:30 மணியளவில் ஆனங்கூர் சாலை, கண்ணபிரான் மண்டபம் அருகே டி.வி.எஸ். 50 வாகனத்தில் வந்த போது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த ஆட்டோ இவர் மீது மோத, முருகன் பலத்த காயமடைந்தார். இவர் குமாரபாளையம் ஜி.எச்.ல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், ஆட்டோ ஓட்டுனர் கலியனூரை சேர்ந்த சரவணன், 43, என்பது தெரியவந்தது. ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

அனுமதியின்றி மது விற்றவர் கைது

குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் அனுமதிஇல்லாமல் மது விற்பனை நடந்து வருவதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, இன்பெக்டர் ரவி தலைமையில் எஸ்.ஐ.மலர்விழி உள்ளிட்ட போலீசார் ஆய்வு செய்ததில் காந்தியடிகள் தெருவில் ஒருவர் மது விற்பது தெரியவந்தது. போலீசார் கையும் களவுமாக அவரை பிடித்து அவரிடமிருந்த நான்கு அரசு மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் மது விற்றவர் அதே பகுதியில் வசிக்கும் செல்வம், 43, என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

போலி லாட்டரி விற்றவர் கைது

குமாரபாளையம் ஆலாங்காட்டுவலசு பகுதியில் போலி லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்ற போது, அங்குள்ள மொபைல்போன் சர்வீஸ் கடை முன்பு ஒருவர் மொபைல் மூலம் நும்பர்களை காட்டி, லாட்டரி சீட்டு நம்பர் என பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்ததில், கல்லங்காட்டுவலசு பகுதியினை சேர்ந்த பெரியசாமி, 30, என்பதும், போலி லாட்டரி சீட்டு விற்பனை செய்ததும் கண்டிபிடிக்கப்பட்டது. இவரை கைது செய்த போலீசார் இவரிடமிருந்து மொபைல் போன் ஒன்றும் பறிமுதல் செய்தனர்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி  கூலி தொழிலாளி உயிரிழப்பு

பள்ளிபாளையம் பெரியகாடு பகுதியயை சேர்ந்தவர் கட்டிட கூலி தொழிலாளி தங்கவேல், 58. இவர் அக். 21ல் காலை 10:00 மணியளவில் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, பஸ்கள் வெளியே வரும் வழியில் உள்ள பேக்கரியின் முன்பு நின்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். இவர் சேலம் ஜி.ஹெச்.ல் சிகிச்சையில் இருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு 08:00 மணியளவில் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News