குமாரபாளையத்தில் வள்ளலார் பிறந்த நாள் விழா

குமாரபாளையத்தில் இரண்டு கல்வி நிலையங்களிள் வள்ளலார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2023-10-06 08:45 GMT

குமாரபாளையம் எஸ் எஸ் எம் கலை அறிவியல் கல்லூரியில் வள்ளலாரின் 200 வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு 4000 அகல் விளக்குகள் ஏற்றி  வழிபாடு நடைபெற்றது.

குமாரபாளையம் எஸ் எஸ் எம் கலை அறிவியல் கல்லூரியில் வள்ளலாரின் 200 வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு 4000 அகல் விளக்குகள் ஏற்றி வள்ளலார் வழிபாடு நடைபெற்றது.

தமிழக அரசு வள்ளல் பெருமானின் பிறந்தநாளை தனிப்பெருங்கருணை தினமாக கொண்டாட வேண்டும் என்று கடந்த ஆண்டு முதல் அக்டோபர் 5 வள்ளலாரின் பிறந்த தினம் தனிப்பெரும் கருணை தினமாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் குமாரபாளையம் எஸ் எஸ் எம் கலை அறிவியல் கல்லூரியில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்விருக்கை ,சன்மார்க்க மன்றம் இணைந்து நடத்திய வள்ளல் பெருமானின் 200 வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

ஜோதி வழிபாட்டினை வள்ளல் பெருமான் இந்த உலகிற்கு அறிவித்த காரணத்தால் அதை ஊக்குவிக்கும் விதமாக 4000 அகல் விளக்குகள் ஏற்றி மிகப்பெரிய அளவில் வழிபாடு நடத்தப்பட்டது. கல்லூரியின் தலைவர் கவாலியர் மதிவாணன் முதல் விளக்கினை ஏற்றி வைத்தார். குரல்மலைச் சங்க நிறுவனர் ரவிக்குமார், ஈரோடு அரசு பொறியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் வெற்றிவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். 4000 விளக்குகளை பேராசிரிய பெருமக்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர்

விழாவில் எஸ் எஸ் என் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் காமராஜ் , பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் பாலமோகன் மற்றும் திரு கல்லூரிகளைச் சார்ந்த பேராசிரியர் பெருமக்கள் மாணவ மாணவிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.நிகழ்வினை எஸ் எஸ் எம் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையினர் ஒருங்கிணைத்தனர்.

குமாரபாளையம் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. பள்ளியில் வள்ளலார் பிறந்த நாள் 

குமாரபாளையம் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ பள்ளியில் செயல்பட்டு வரும் மகாத்மா காந்தி மாலை நேர பயிலகத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் வள்ளலார் பிறந்த தினம் கொண்டாடப் பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வுக்கு, அமைப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.எஸ்.எம். கலை கல்லூரி பேராசிரியர்கள் சங்கரராமன் மற்றும் மஞ்சுளா பங்கேற்று வள்ளலார் சிறப்புக்கள் பற்றி பேசியதுடன், மாணவ, மாணவியர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறினார்கள். மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, மற்றும் வினாடி-வினா போட்டிகள் வைக்கப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு தலைமை ஆசிரியை சுகந்தி பரிசாக புத்தகங்கள் வழங்கினார். மாலை நேர வகுப்பு ஆசிரியர்கள் ராணி, சித்ரா, ஜமுனா, மற்றும் தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.



Tags:    

Similar News