வீட்டு வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

குமாரபாளையத்தில் வீட்டு வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி முகாம், தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது;

Update: 2023-03-04 10:45 GMT

குமாரபாளையத்தில் வீட்டு வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி முகாம் மற்றும் மாணவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் வீட்டு வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி முகாம் மற்றும் மாணவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை, திருச்செங்கோடு கோட்டம் சார்பில் வெறி நோயினை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி மகாம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக உதவி இயக்குனர் அருண்பாலாஜி பங்கேற்று, வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போட்டு முகாமை துவக்கி வைத்து பேசினார். இவர் பேசியதாவது:எந்த ஒரு பிராணியையும் எந்த விதத்திலும் துன்புறுத்த கூடாது. பிராணிகளை அடித்தல், உதித்தல், சவாரி செய்தல், அதிக பாரங்களை ஏற்றுதல் செய்தல் கூடாது. மிக குறுகிய அளவிலான இடுக்குகளில் அடைத்து வைக்க கூடாது. மாடுகளுக்கு சூடு வைத்தல், கொம்பினை அறுத்தல், சாட்டையால் அடித்தல், ஊசிக்கம்பினால் குத்துதல், செய்ய கூடாது.

முன் கழுத்து கழலை உள்ள மாடுகளை வேலைக்கு பயன்படுத்த கூடாது. நோயுற்ற, காயமுற்ற எருதுகளை வண்டியில் பூட்டி பாரம் இழுக்க வைக்க கூடாது. நாய்களை அதிக நேரம் ஒரே இடத்தில் கட்டி வைத்தல், கழுத்தில் கயிறு மாட்டி வைத்திருத்தல் கூடாது. நாய்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் வழங்கி வளர்க்க வேண்டும். தெரு நாய்களை அடித்து கொல்வது, உணவில் விஷம் கலந்து வைப்பது. வனப்பறவைகள் மற்றும் வன விலங்குகளை வீட்டில் வைத்து வளர்ப்பது சட்டப்படி குற்றம். கால்நடைகளை எடுத்து செல்லும் போது வாகனத்தின் மேற்கூரையில் மழை மற்றும் வெயில் படாதவாறு கூடாரம் அமைத்து கால்நடைகளை ஏற்றி செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

பொதுமக்கள் பெரும்பாலோர் தங்கள் வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.இதில் நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்  செல்வராஜ், கால்நடை டாக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Tags:    

Similar News