3 மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் அரசுக்கு நன்றி தெரிவிப்பு

கட்டிட கட்டுமான சங்கத்தினர் அமைப்புசாரா தொழிலாளர்கள் உதவித்தொகை உயர்வுக்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.;

Update: 2022-02-03 07:19 GMT

அமைப்புசாரா தொழிலாளர்களின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றோர்.

சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட கட்டிட கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் முற்போக்கு சங்க கூட்டத்தில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 

சேலம்,ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட  கட்டிட கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் முற்போக்கு சங்க செயற்குழுக்கூட்டம் தலைவர் .சந்திரசேகர்  தலைமையில்  காடச்சநல்லூர் தொழிற் சங்க அலுவலகம் முன் நடைபெற்றது.  இதில் சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சங்க கூட்டத்தினை சிறப்பித்தனர். இக்கூட்டத்தில் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் உறுப்பினர்களிடம்  உள்ள குறை, நிறைகளை அறிந்து கொள்வதற்காக நடைபெற்றது. உறுப்பினர்கள் தங்களின் குறை மற்றும் நிறைகளை பகிர்ந்துகொணடனர். மேலும் இக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தொழிலாளர்களுக்கு  உதவித்தொகையை உயர்த்தி வழங்கியதற்கும் மற்றும் மேலும் சில புதிய உதவித் தொகைகளை அறிவித்துள்ளமைக்கும் தமிழக அரசுக்கு முதலில் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

அடுத்ததாக  நலவாரியத்தில் புதிதாக உறுப்பினர்கள் பதிவு செய்வது மற்றும் உதவித்தொகைகளை  எவ்வாறு பெறுவது என்பது குறித்து உறுப்பினர்களிடம்  கொண்டுசெல்வது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் உறுப்பினர்களிடம்  உள்ள குறைகள்  கேட்கப்பட்டு அந்த குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன.

Tags:    

Similar News