தேவூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா - தங்க மோதிரம் வழங்கல்
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, தேவூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
சேலம் மேற்கு மாவட்டம், சங்ககிரி ஒன்றிய திமுக சார்பில், திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவின் 44 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தேவூர் ,அரசிராமணி அரசு மருத்துவமனையில், அன்றைய தினம் பிறந்த 4 குழந்தைகளுக்கு, முன்னாள் அமைச்சரும், சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான செல்வகணபதி உத்தரவின் பேரில், தங்க மோதிரத்தை சங்ககிரி ஒன்றிய திமுக பொறுப்பாளர் ராஜேஷ்,தலைமை வகித்து வழங்கினார்.
அரசு சுகாதார நிலைய மருத்துவர் நாகஜோதி முன்னிலையில் நடந்த நிகழ்வில், அரசு மருத்துவமனையில் கனிமொழி என்கிற பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தங்க மோதிரத்தை அன்பளிப்பாக வழங்கினார். மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜவேலு, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் வெங்கடாசலம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலுசாமி,தளபதி சண்முகம், மாவட்ட பிரதிநிதி வெங்கடேஷ், தேவூர் நகர செயலாளர் முருகன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அரசிராமணி குள்ளம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. இதில் அரசிராமணி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வைத்தீஸ்வரன், மாவட்ட பிரதிநிதி ஆனந்தகுமார், ராமசாமி, அரசிராமணி பேரூர் செயலாளர் காவேரி, அவைத் தலைவர் ஆறுமுகம், துணை செயலாளர் சித்தன், வார்டு கவுன்சிலர் செந்தில் குமார் உடபட பலர் கலந்து கொண்டனர்.