காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவர்கள் பலி
குமாரபாளையத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவர்கள் பலியானார்கள்.;
காவிரி ஆற்றில் மூழ்கிய இரு மாணவர்களை தேடும் தீயணைப்புத்துறையினர்
குமாரபாளையத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவர்கள் பலியானார்கள்.
குமாரபாளையம் நாராயண நகரை சேர்ந்தவர்கள் கனிஷ்கரன்,18, தனுஷ், 18. இருவரும் சமீபத்தில் பிளஸ் 2 படித்து முடித்தவர்கள். நேற்று மாலை 03:00 மணியளவில் குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள காவிரி ஆற்றுப்படித்துறையில் இறங்கி, நடு ஆற்றுக்கு சென்று குளித்துள்ளனர்.
ஆழமான பகுதிக்கு சென்றதும் இருவரும் மூழ்கினர். இது குறித்து அருகே இருந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் குமாரபாளையம் தீயணைப்பு படையினர் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நேரில் சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி இருவரின் உடல்களை மீட்டனர். குமாரபாளையம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.