இரு வேறு சாலை விபத்துகளில் இருவர் பலி

குமாரபாளையத்தில் நேரிட்ட இரு வேறு சாலை விபத்துகளில் இருவர் பலியானார்கள்;

Update: 2023-03-08 14:15 GMT

பைல் படம்

குமாரபாளையத்தில் நடைபெற்ற இரு வெவ்வேறு விபத்துகளில் இருவர் பலியானார்கள்.

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வைகுந்தகுமார்(46.), சமையல் கூலி. இவர் நேற்று முன் தினம் இரவு  சேலம், கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே நான்கு சாலை சந்திப்பு பகுதியில் சாலையை நடந்து கடக்கும்போது, கோவை பக்கமிருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த ஹுண்டாய் கார் இவர் மீது மோதியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, காரின் ஓட்டுனர் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த, தனியார் நிறுவன மேலாளர், ஸ்ரீதர்( 41),  என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

கரூர் மாவட்டம், புகளூர், பகுதியை சேர்ந்தவர் முருகன்(24.) நூல் மில்லில் கூலி வேலை. தற்போது ஆனங்கூர் சாலை, ரங்கனூர் நால் ரோடு, பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார். பிப். 26ல் இரவு சுமார் 12 மணியளவில் ஓட்டல் கடையில் சாப்பிட்டு விட்டு வருவதாக கூறி சென்றவர், கத்தேரி பிரிவு பகுதியில் சாப்பிட்டு விட்டு, சேலம், கோவை புறவழிச் சாலையில் இடது புறமாக தனது யமஹா டூவீலரில் வந்த போது, பஞ்சர் ஆகி, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மேலும் மேல் சிகிச்சைக்காக ஈரோடு ஜி.ஹெச்.ல் சேர்க்கப்பட்டார். இவர் சிகிச்சை பலனில்லாமல் நேற்று முன்தினம் இரவில் உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News