நூதன முறையில் போலி லாட்டரி சீட்டு விற்பனை: இருவர் கைது

குமாரபாளையத்தில் நூதன முறையில் போலி லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது செய்யப்பட்டார்கள்.

Update: 2022-01-11 13:45 GMT

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போலி லாட்டரி சீட்டு விற்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று மதியம் 01:30 மணியளவில் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி உள்ளிட்ட போலீசார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ராஜா சலூன் கடை அருகில் வெள்ளை தாளில் நெம்பர்கள் எழுதி, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு என்று கூறி பொதுமக்களிடம் ஏமாற்றி இருவர் விற்பது தெரியவந்தது. கையும், களவுமாக பிடிபட்ட இருவரிடம் வெள்ளை தாளில் நெம்பர்கள் எழுதப்பட்ட துண்டு சீட்டுகள் நான்கினை பறிமுதல் செய்தனர். விசாரணையில் குமாரபாளையம் வேதாந்தபுரத்தை சேர்ந்த சேகர், 55, அம்மன் நகரை சேர்ந்த கவுதம், 29, என்பது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News