குமாரபாளையம் அருகே டூவீலர் மீது லாரி மோதல்: கூலித் தொழிலாளி படுகாயம்
குமாரபாளையம் அருகே டூவீலர் மீது லாரி மோதி கட்டிட கூலி தொழிலாளி படுகாயமடைந்தார்.;
குமாரபாளையம் அருகே டூவீலர் மீது லாரி மோதி கட்டிட கூலி தொழிலாளி படுகாயமடைந்தார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே காந்திநகர் பகுதியில் வசிப்பவர் பழனிச்சாமி, 65. கட்டிட கூலி. இவர் நேற்று முன்தினம் காலை 09:00 மணியளவில் தனது ஹோண்டா ஆக்டிவா வாகனத்தில், கோட்டைமேடு சர்வீஸ் சாலையில் சாலையை கடந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று இவரது டூவீலர் மீது மோதி பலத்த காயமடைந்தார்.
இதனையடுத்து படுகாயமடைந்த இவரை சிகிச்சைக்காக பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனம் மற்றும் அதன் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.