நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்க ளுக்கு பயிற்சி முகாம்

குமாரபாளையத்தில் நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது;

Update: 2023-08-11 14:00 GMT

குமாரபாளையத்தில் நடந்த பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி முகாமில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பேசினார்.

குமாரபாளையத்தில் நகராட்சி,பேரூராட்சி உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

குமாரபாளையம் வட்டார வள மைய அலுவலகத்தில் குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நகராட்சி,பேரூராட்சி உறுப்பினர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

படைவீடு பேரூராட்சி உறுப்பினர்கள், குமாரபாளையம் நகராட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர். படைவீடு பேரூராட்சி தலைவி ராதாமணி வாழ்த்தி பேசினார்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆடலரசு, பள்ளிபாளையம் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர்.

இப்பயிற்சி முகாமில் அரசு பள்ளிகளின் மேலாண்மை குழுக்கள் பற்றியும், அக்குழுக்களின் உறுப்பினர்கள் , அவர்களின் பொறுப்புகள் , பள்ளி நிர்வாகம் குறித்த அவர்களின் பங்கு, அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டம், மாற்று திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், பள்ளி மேலாண்மை குழு நடைமுறைகள், பள்ளி மேம்பாட்டு திட்டங்கள்,குழந்தை உரிமைகள் முதலானவற்றை நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்களுக்கும் பயிற்சி கையேடு மற்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. நகராட்சி ஆணையர் சரவணன் பயிற்சி கையேட்டினை வழங்கினார்.

வட்டார வள மைய மேற்பார்வையாளர்(பொ) கனகராஜு மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பரமத்தி வட்டார ஆசிரியர் பயிற்றுநர் ராஜா, மல்லசமுத்திரம் பிள்ளாநல்லூர் பேரூராட்சி சமுதாய அமைப்பாளர் தேவகி ஆகியோர் பயிற்சி வழங்கினர்.



Tags:    

Similar News