ஆகா! கண்ணக் கட்டுதே. அதிர்ந்த பள்ளிபாளையம் பேருந்து நிலையம்

வெளியூரில் இருந்து வருபவர்கள், பொருட்கள் வாங்க வருபவர்கள் என பேருந்துநிலைய பகுதியில் மக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல்

Update: 2021-05-09 16:00 GMT

நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு  கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சில தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில் நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு தினங்களை பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்  என அறிவித்து இருந்தது.

இதனால் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் இருந்து சென்னை போன்ற பெரு நகரங்களில் வேலை செய்யும்  பெரும்பாலான இளைஞர் இளைஞிகள்  இந்த ஊரடங்கு அறிவிப்பு காரணமாக நேற்றும் இன்றும் ஏராளமானவர்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.

மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க பள்ளிபாளையம் கடைவீதிகளில் மக்கள் திரண்டதால் பள்ளிபாளையம் பேருந்து நிலையம் மிகுந்த வாகன போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பாக காணப்பட்டது!

Tags:    

Similar News