குமாரபாளையம் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க கோரிக்கை

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.;

Update: 2023-05-27 11:15 GMT

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் முருகன் தலைமையில் நடந்தது. இதில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பல ஊர்களில் இருந்து விட்டு செல்லும் முதியவர்களை காப்பகத்தில் சேர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், முதியவர்களால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினை களைவதற்கு நகராட்சி நிர்வாகத்தினர் கவனம் செலுத்த வேண்டும். பயன்படுத்தப்படாத போலீஸ் கூண்டினை அகற்ற வேண்டும், மாலை வேளைகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின்  வரம்பு மீறல்களை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும். பஸ் ஸ்டாண்ட் வடிகால்களில் அடைப்பு உள்ளதால், மழைக்காலங்களில் கழிவுநீர் கடைகளுக்குள் புகுவதை நகராட்சி நிர்வாகத்தினர் தடுக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து சங்க தலைவர் முருகன் கூறியதாவது: பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பல ஊர்களில் இருந்து முதியவர்களை கொண்டு வந்து விட்டு செல்கின்றனர். இவர்கள் தற்காலிக போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வைக்கப்பட்ட கூண்டின் பின்புறம் தங்கி, அங்கேயே படுப்பது, இயற்கை உபாதைகள் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் பஸ் ஸ்டாண்ட் கடைகள் முன்பும் பல முதியோர்கள் இரவில் படுத்து தூங்குகின்றனர். காலையில் கடை திறக்க வரும் வரை எழுந்திரிப்பது இல்லை. இதனால் வீண் வாக்குவாதங்கள் ஏற்படுகிறது. மாலை வேளைகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்  வரம்பு மீறல்களை கட்டுப்படுத்த வேண்டும். 

இதன் காரணமாக பல மாணவியர்கள் வீட்டை விட்டு ஓடி செல்லும் நிலையும் ஏற்படுகிறது.. பல மாணவிகளின் செயல்களால், பெற்றோர்கள் கண்ணீர் விடும் நிலைக்கு ஆளாகின்றனர். தற்காலிக போலீஸ் ஸ்டேஷன் அமைப்பதாக கூறி, பல ஆண்டுகள் முன்பு தகரத்தாலான கூண்டு ஒன்றினை பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கொண்டு வந்து வைத்தனர். ஆனால் இதுவரை இதில் போலீஸ் ஸ்டேஷன் செயல்படவில்லை. இதன் மறைப்பில்தான் முதியவர்கள் அசுத்தம் செய்து வருவதால், இதனை உடனே அகற்ற வேண்டும். பஸ் ஸ்டாண்ட் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு, மழை வந்தால், வடிகாலில் கழிவுநீர் செல்லாமல், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள கடைகளில் புகுந்து சேதத்தை விளைவிக்கின்றன என்றார்.

இதில் செயலர் நஞ்சப்பன், பொருளால் மஸ்தான், துணை தலைவர் நாகராஜ், துணை செயலர் கண்ணன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Tags:    

Similar News