குமாரபாளையம் அரசு பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா

கோடை விடுமுறையில் பள்ளி குழந்தைகளுக்கு பயனுள்ள தகவல்களை கற்பிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது

Update: 2023-05-18 12:00 GMT

குமராபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா நடந்தது

குமராபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா தலைமை ஆசிரியர்கள் கற்பகம் மற்றும் சுப்ரமணி தலைமையில் நடந்தது. கோடை விடுமுறையில் பள்ளி குழந்தைகளுக்கு பயனுள்ள தகவல்களை கற்பிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஆசிரியர் பயிற்றுநர் கணேஷ் குமார் மற்றும் இடைநிலை ஆசிரியர் ஸ்டெல்லா அருட்செல்வி  ஆகியோர் துவக்கி வைத்தனர்.

வானவில் மன்ற கருத்தாளர் குணசேகர் பங்கேற்று பரிசோதனைகள் மற்றும் மந்திரமா தந்திரமா நிகழ்வுகளை எளிய முறையில் மாணவர்களுக்கு செய்து காண்பித்தார். இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ராஜாத்தி பங்கேற்று, எளிய கணிதம் மற்றும் மாணவர்களின் கற்பனை திறன்களை வளர்த்துக் கொள்ளும் செயல்பாடுகள் மற்றும் பல தனித்திறமைகள் குறித்து பேசியதுடன், மாணவர்களை செயல்விளக்கமளிக்க வைத்தார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் மாணவர்களுக்கு வினாடி வினா நடத்தப்பட்டு பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடியல் பிரகாஷ், கவுன்சிலர் ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, வானவில் மன்றம் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆகியவை ஒருங்கிணைந்து ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா என்ற தலைப்பில் குமாரபாளையம் மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. இதில் தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமை வகித்தார். இந்த அறிவியல் திருவிழாவில் வானவில் மன்ற கருத்தாளர் குணசேகர், எளிய அறிவியல் பரிசோதனைகள், புதிர் கணக்குகள், கற்பனையும் கைத்திறனும் மற்றும் பல செயல்பாடுகள் மாணவர்களிடையே செய்து காண்பித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, பங்கு பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் கணேஷ்குமார், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் சரவணன், பி.டி.ஏ. தலைவர் ரவி, பள்ளி மேலாண்மை குழு தலைவி மேகலா, கவுன்சிலர் பரிமளம், விடியல் ஆரம்பம் பிரகாஷ் பெற்றோர் பொதுமக்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தன்னார்வலர் மோனிகா உள்பட பலர் பங்கேற்றனர்.


Tags:    

Similar News