வேகத்தடைக்கு வெள்ளை பெயின்ட் அடிக்கும் பணி தொடக்கம்

குமாரபாளையத்தில் வேகத் தடைகளுக்கு வெள்ளை பெயின்ட் அடிக்கும் பணி தொங்கியுள்ளது;

Update: 2023-09-30 16:30 GMT

குமாரபாளையம் இடைப்பாடி சாலையில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்ட் அடிக்கும் பணி தொடங்கியது.

குமாரபாளையத்தில் வேகத்தடைகளுக்கு வெள்ளை பெயின்ட் அடிக்கும் பணி துவக்கப்பட்டது.

குமாரபாளையம் இடைப்பாடி சாலை மிகவும் போக்குவரத்து மிகுந்த சாலை. அரசு மருத்துவமனை, தினசரி காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், நகராட்சி மயானம் செல்லும் வழி, சின்னப்பநாயக்கன்பாளையம், காவேரி நகர், வாரச்சந்தை, உழவர் சந்தை, நகராட்சி பூங்கா, பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில், நகராட்சி நீரேற்று நிலையம் உள்ளிட்ட பல இடங்கள் இந்த சாலையில் உள்ளன. மேலும் நூற்றுக்கணக்கான விசைத்தறி, கைத்தறி கூடங்கள், சாயப்பட்டறைகள் இந்த சாலையில் உள்ளன. இடைப்பாடி, தேவூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஆயிரகணக்கான மாணவ, மாணவியர் குமாரபாளையத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு கல்வி பயில வந்து செல்கின்றனர்.

மிக முக்கிய சாலையில் உள்ள வேகத்தடைகள் வெள்ளை பெயிண்ட் இல்லாமல் இருப்பதால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் இங்கு வெள்ளை பெயிண்ட் அடிக்க வேண்டுன் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் படி, தற்போது வெள்ளை பெயிண்ட் அடிக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. இது போல் அனைத்து பகுதியில் உள்ள நெடுஞ்சாலை வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்ட் அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.




Tags:    

Similar News