இட ஒதுக்கீடு கேட்டு பாமக வினர் தபால் அனுப்பும் போராட்டம்
இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் தபால் அனுப்பும் போராட்டம் குமாரபாளையத்தில் நடந்தது;
குமாரபாளையத்தில் நடந்த பா.ம.க.வினர் தபால் அனுப்பும் போராட்டம்
10.5% இட ஒதுக்கீடு கேட்டு பா.ம.க.வினர் தபால் அனுப்பும் போராட்டம் குமாரபாளையத்தில் நடந்தது.
மாநில அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்து பின்னர் தடை விலக்கப்பட்டது. ஓராண்டாகியும் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை. கடந்த கல்வியாண்டிலேயே இந்த நடைமுறைப்படுத்தாமல் பெரும் ஏமாற்றமும் இழப்பும் ஏற்பட்டதாக புகார் எழுந்தது. நடப்பாண்டில் இதை உடனடியாக அமல்படுத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க., வலியுறுத்தி வருகிறது.
இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் பா.ம.க. சார்பில் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசு உடனே வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி குமாரபாளையம் தலைமை தபால் அலுவலகத்தில் நடந்த கடிதம் அனுப்பும் போராட்டத்தில் மாவட்ட செயலர் சுதாகர், மாவட்ட தலைவர் மூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலர் கார்த்திக், நகர செயலர் கோவிந்தன், நிர்வாகிகள் சுப்ரமணி, செந்தில், சிவராமன், மாதையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போராட்டம் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
பா.ம.க. நிர்வாகி குறித்து அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குமாரபாளையம் போலீசில் புகார் மனு
குமாரபாளையம் பா.ம.க. நகர செயலராக இருப்பவர் சுதாகர். இவர் மீது தவறான கருத்துகளை இழிவு படுத்தும் நோக்கத்துடன் பிரபு என்ற நபர் மொபைல் போன் மூலம் பரப்பி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பிரபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பா.ம.க. நிர்வாகிகள் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தனர்.
இது குறித்து மாவட்ட இளைஞர் அணி துணை செயலர் கார்த்தி கூறியதாவது: பா.ம.க. கட்சி மீதும், நிர்வாகிகள் மீதும் பிரபு என்பவர் அவதூறு பரப்பி வருகிறார். இது பா.ம.க. கட்சி மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ள எங்களைப் போன்ற ஏராளமான நபர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. அதனால் அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் செய்துள்ளோம் என்றார் அவர். இதில் நிர்வாகிகள் செந்தில், சுப்பிரமணி, சிவராமன், ஜெகந்நாதன், செல்லமுத்து, தங்கராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.