குப்பைகளை அகற்ற நகராட்சி சேர்மனிடம் கோரிக்கை வைத்த அரசு கலைக் கல்லூரி முதல்வர்

குமாரபாளையம் சேர்மனிடம் குப்பைகளை அகற்ற அரசு கலைக் கல்லூரி முதல்வர் கோரிக்கை விடுத்தார்.;

Update: 2022-04-19 14:45 GMT

குமாரபாளையம் சேர்மன் விஜய்கண்ணனிடம் அரசு கலை கல்லூரி முதல்வர் ரேணுகா கோரிக்கை வைத்தார்.

குமாரபாளையம் நகராட்சி சேர்மனிடம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசு கலைக் கல்லூரி முதல்வர் கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து சேர்மன் விஜய்கண்ணன் கூறுகையில், அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஏப். 20ல் நடைபெறும் முதலாம் பட்டமளிப்பு விழாவிற்கு அழைப்பு கொடுத்தனர். கல்லூரி வளாகத்தில் குடிநீர் பைப் லைன் பழுது சரி செய்து கொடுக்குமாறும், தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டார். நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளேன் என கூறினார்.

கல்லூரி முதல்வர் ரேணுகா, பேராசிரியர் ரகுபதி, தட்டான்குட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் செல்லமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News