நீர் தேக்கத்தொட்டிகளை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்

குமாரபாளையம் அருகே முன்னாள் அமைச்சர் நீர் தேக்கத்தொட்டிகளை முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ திறந்து வைத்தார்.;

Update: 2023-06-17 16:45 GMT

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி பகுதியில் நடந்த தார் சாலை பூமி பூஜை விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி இனிப்புகள் வழங்கினார்.

குமாரபாளையம் அருகே முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எவ்ஏ  நீர் தேக்கத்தொட்டிகளை திறந்து வைத்தார்.

குமாரபாளையம் அருகே நீர் தேக்கத்தொட்டிகள் திறப்பு விழா, தார் சாலை பூமி பூஜை விழா நடந்தது..

பல்லக்காபாளையம் ஊராட்சி, கொல்லப்பட்டியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி திறப்பு விழா, விவேகானந்தா சாலை பின்புறம் தார் சாலை, தட்டான்குட்டை ஊராட்சி வீரப்பம்பாளையம் வாய்க்கால் கரை தார் சாலை, உப்புக்குளம் காட்டுவளவு பகுதியில் மேனிலை நீர் தேக்கத்தொட்டி திறப்பு விழா, குப்பாண்டபாளையம் ஊராட்சியில் சானார்பாளையம் தார்சாலை, குள்ளநாயக்கன் பாளையம் தார் சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் பூமி பூஜை, திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று, நீர் தேக்கத்தொட்டிகளை திறந்து வைத்தும், தார் சாலை பணிகளுக்கு பூமி பூஜை செய்தும் பணிகளை துவக்கி வைத்தார்.   

குப்பாண்டபாளையம் பகுதியில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் தனசேகரன் தலைமை வகித்தனர். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். 

 


Tags:    

Similar News