முன்னாள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பளித்த முன்னாள் அமைச்சர்
குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வருக்கு முன்னாள் அமைச்சர் உற்சாக வரவேற்பளித்தார்
கோவையில் திருமண விழாவில் பங்கேற்க முன்னாள் முதல்வர் இடைப்பாடி பழனிசாமி குமாரபாளையம் வழியாக காரில் வந்தார். அவருக்கு குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்எல்ஏ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்று மலர்கொத்து வழங்கியும், சால்வைகள் வழங்கியும் வரவேற்றனர். இவைகளை பெற்றுக்கொண்ட இடைப்பாடி பழனிசாமி அங்கிருந்து அனைவரிடமும் விடைபெற்று சென்றார்.
பாதுகாப்பு பணியில் போக்குவரத்து போலீஸார் இல்லை.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் காண கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் பெருமளவில் திரண்டு அச்சத்துடன் சாலையை கடந்து வந்து கொண்டிருந்தனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என காலை 8:00 மணி முதலும், மாலையில் இவர்கள் வீடு திரும்பும் நேரமான மாலை 4:00 மணி முதலும் புறவழிச்சாலை பகுதியில் ஒரு போக்குவரத்து போலீஸார் பணியில் இருப்பதில்லை. போக்குவரத்து போலீசார் பகல் 12:00 மணிக்கு மேல் பணிக்கு வருவது, இரவு 9:00 மணிக்கு மேல் வருவது என்பது யாருக்கும் எவ்வித பலனும் இல்லை. அந்த நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் கிடையாது. மாவட்ட நிர்வாகத்தினர் இது குறித்து நடவடிக்கை எடுத்து, ஒரு போக்குவரத்து போலீசாவது எப்போதும் போக்குவரத்து சரி செய்ய நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் மதிமுக. முன்னாள் நகர செயலர் அதிமுகவில் சேர்ந்தார்:
குமாரபாளையம் நகரில் பல அரசியல் பிரமுகர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். நகராட்சி கவுன்சிலர்கள் நந்தினிதேவி, வள்ளியம்மாள், ரேவதி, கோட்டைமேடு ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் தனசேகரன், வரிசையில் தற்போது, குமாரபாளையம் முன்னாள் ம.தி.மு.க. நகர செயலர் சிவகுமார், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டார். குமாரபாளையம் நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரும் அ.தி.மு.க.வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர் தங்கமணி உடனிருந்தார்.