குமாரபாளையத்தில் துக்கம் விசாரிக்க வந்த முன்னாள் முதல்வர்

குமாரபாளையம் அருகே முன்னாள் அமைச்சரின் சகோதரி இறந்ததால், துக்கம் விசாரிக்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார்.;

Update: 2023-03-26 01:32 GMT

குமாரபாளையம் அருகே முன்னாள் அமைச்சரின் சகோதரி இறந்ததால், துக்கம் விசாரிக்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்தார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதி தற்போதைய எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான தங்கமணியின் சகோதரி நாகரத்தினம் சில நாட்களுக்கு முன்பு இறந்தார். இவரது இறப்பு குறித்து துக்கம் விசாரிக்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிபாளையம் தங்கமணி வீட்டிற்கு வந்தார்.

தங்கமணியிடம் அவரது சகோதரி இறப்பு குறித்து விசாரித்து, அவரது திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மலரஞ்சலி செலுத்தினார். இதில் தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா, உள்ளிட்ட பல நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News