ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் -எஸ்.பி.
குமாரபாளையம் அருகே ஜல்லிக்கட்டு நடை பெறும் இடத்தை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.;
குமாரபாளையம் அருகே ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை மாவட்ட கலெக்டர், எஸ்.பி. நேரில் பார்வையிட்டன
குமாரபாளையம் அருகே ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை நாமக்கல் மாவட்ட கலெக்டர், எஸ்.பி. நேரில் பார்வையிட்டனர்.
குமாரபாளையம் ஜல்லிகட்டு நடைபெறும் திடலில் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி, காளைகளுக்கு உரிய பாதுகாப்பு, காளைகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படமால் இருக்கும் வகையிலும், விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளனவா? என்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டார். ஜல்லிகட்டு பேரவை தலைவர் வினோத்குமார், செயலாளர் ராஜ்குமார் வசம் ஏற்பாடுகளைப்பற்றி கேட்டறிந்தார்.
இந்த ஆய்வில்,நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. கலைச்செல்வன், திருச்செங்கோடு கோட்டாட்சியர் கவுசல்யா, திருச்செங்கோடு டி.எஸ்.பி. மகாலட்சுமி, வட்டாட்சியர் சண்முகவேல், இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. சந்தியா, வி.ஏ.ஓ. செந்தில் மற்றும் குமாரபாளையம் ஜல்லிகட்டு பேரவை நிர்வாகிகள் சுசிகுமார் புவனேஸ்வரன், ரவி,கதிரவன்சேகர், வெங்கடேசன், உள்பட பலர் உடனிருந்தனர். ஏப்.2ல் நடக்கவிருந்த இந்த போட்டி, ஏற்பாடுகள் முழுமை பெறாததால் தேதி ஒத்தி வைக்கப்பட்டு, தற்போது ஏப். 16ல் ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
குமாரபாளையத்தில் எஸ்.எஸ்.எம். பொறியியியல் கல்லூரி பின்புறம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான பூமி பூஜை சில நாட்கள் முன்பு நடைபெற்றது. அமைப்பாளர் வினோத்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தி.மு.க. பொருளர் ராஜாராம், ஒன்றிய தி.மு.க. செயலர் வெப்படை செல்வராஜ், குமாரபாளையம் சேர்மன் விஜய்கண்ணன், நகர தி.மு.க. செயலர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இது பற்றி ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பாளர் வினோத்குமார் கூறியதாவது: குமாரபாளையத்தில் ஏழாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டிகள் அரசு விதிமுறைப்படி நடைபெறவுள்ளன. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட காளைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
குமாரபாளையத்தில் கடந்த ஆறு ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதாக கூறப்படும் நிலையில், நேற்று திருச்செங்கோடு கோட்டாச்சியர் கவுசல்யா, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தார்.
போட்டிகள் நடத்தும் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை செயலர் ராஜ்குமார், அதிகாரிகளிடம் போட்டிகள் நடைபெறும் இடம், பார்வையாளர்கள் அமரும் இடம், கால்நடைகள் இருக்கும் இடம், வாடிவாசல் அமைக்கவிருக்கும் இடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த கோரி அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அருண் பாலாஜி, டி.எஸ்.பி. மகாலட்சுமி, தாசில்தார் சண்முகவேல், இன்ஸ்பெக்டர் ரவி, கால்நடை மருத்துவர் செந்தில்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.
இது குறித்து குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேல் கூறியதாவது: குமாரபாளையத்தில் ஏப். 2ல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கவிருப்பதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் அதற்கான கட்டமைப்பு பணிகள் முழுமை பெறவில்லை. பணிகள் முழுமை பெற்றதும், மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்த பின் தேதி நிர்ணயம் செய்யப்படும். குறிப்பிட்ட அந்த தேதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் முழுமை பெற்ற நிலையில் மீண்டும் மாவட்ட கலெக்டர், எஸ்.பி. நேரில் பார்வையிட்டனர்.