சிமெண்ட் கற்கள் விலை செப்.20 முதல் உயர்வு

செப். 20 முதல் சிமெண்ட்கற்கள் விலை உயர்த்தப்படும் என சிமெண்ட் கற்கள் உற்பத்தியாளர் கள் சங்கம் தீர்மானித்துள்ளது;

Update: 2023-09-14 08:00 GMT

குமாரபாளையத்தில் நடந்த சிமெண்ட் கற்கள் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில்  பேசிய மேட்டுர் மண்டல தலைவர் தனபால் . உடன் துணை தலைவர் சங்கமேஸ்வரன் 

செப். 20 முதல் சிமெண்ட் ற்கள் விலை உயர்த்துவது என சிமெண்ட் கற்கள் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

குமாரபாளையம், பள்ளிபாளையம், வெப்படை,திருச்செங்கோடு, பவானி உள்ளிட்ட மேட்டூர் மண்டல பிளை ஆஷ் பிரிக்ஸ் அசோசியேசன் சார்பில் ஆலோசனை கூட்டம் குமாரபாளையத்தில் மண்டல தலைவர் தனபாலன் தலைமையில் நடந்தது.

சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் விலை உயர்வு, உற்பத்தி செலவு, பணியாட்கள் கூலி ஆகியவற்றால் இதுவரை 06:50க்கு விற்கப்பட்டு வந்த சிமெண்ட் கற்கள் செப். 20 முதல் 07:50 ரூபாய்க்கு விற்பதாக இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுவரை ஆதரவு கொடுத்து வந்த வாடிக்கையாளர்கள், பொறியாளர்கள், தொடர்ந்து ஆதரவு வழங்கி உதவ வேண்டுமென சங்கத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. துணைத் தலைவர் சங்கமேஸ்வரன் உள்பட சிமெண்ட் கற்கள் உற்பத்தியாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

செம்மண்ணால் செய்யப்பட்ட செங்கற்கள் விலை அதிகம் என்பதால், தற்போது விலை குறைவான சிமெண்ட் கற்கள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது இதுவும் விலை உயரும் என்பதால், கட்டுமான பணிகள் மிகவும் பாதிக்கப்படும் நிலை உருவாகும். ஏற்கெனவே மணல், சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்த நிலையில், விலை குறைவாக கிடைத்த சிமெண்ட் கற்களின் விலையும்தற்போது அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News