தெரு விளக்கு மறைத்து கட்டிய பேனர் அகற்றம்!
குமாரபாளையத்தில் தெரு விளக்கு மறைத்து கட்டிய பேனர் அகற்றப்பட்டது.;
தெரு விளக்கை மறைத்து கட்டிய பேனர் அகற்றம்
குமாரபாளையத்தில் தெரு விளக்கு மறைத்து கட்டிய பேனர் அகற்றப்பட்டது.
குமாரபாளையத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர் காவேரி நகர் புதிய பாலம் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் வியாபார நிறுவனத்தார் தங்கள் கடை விளம்பரங்களை பிளெக்ஸ் பேனர்கள் மூலம் பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்தனர்.
பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பஸ்கள் உள்ளே நுழையும் இடத்தின் எதிரில் வெளிச்சம் இருக்க வேண்டும் என்பதற்காக, சோடியம் விளக்கு அமைக்கப்பட்டிருந்தது. இதனை மறைத்து, வெளிச்சம் சாலையில் விழாத வகையில், இருள் சூழ்ந்த நிலையில் ஒரு வியாபார நிறுவன பேனர் அமைக்கப்பட்டிருந்தது.
இது அப்பகுதியில் பஸ் ஓட்டுனர் உள்ளிட்ட பொதுமக்களுக்கு பெரும் அவஸ்தையை ஏற்படுத்தியது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அந்த பேனரை அகற்றினர்.
இது போல் பல பேனர்கள் உரிய அனுமதி பெறாமலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவைகளை அகற்றி, சம்பந்தபட்ட நபர்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.