பவானியில் மூப்பனார் பிறந்த நாள் விழா, 500 மரக்கன்றுகள் நட்ட த.மா.கா.

பவானியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூப்பனாரின் பிறந்த நாளையொட்டி 500 மரக்கன்றுகள் நடப்பட்டது.;

Update: 2021-08-19 17:15 GMT

பவானியில் த.மா.கா. சார்பில் 500 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கப்பட்டது.

சித்தோடு அருகே கோவை,சேலம் புறவழிச்சாலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியோ சார்பில், மூப்பனாரின் 90வது பிறந்தநாளையொட்டி 500 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

ஈரோடு மத்திய மாவட்ட த.மா.க.நிர்வாகி விஜயகுமார் தலைமை வகித்தார். மூப்பனாரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

சாலையின் இரு புறங்களிலும் வேம்பு, புங்கன், நாவல், நீர் மருது, சரக்கொன்றை உள்ளிட்ட 500 மரங்கள் நடவு செய்யப்பட்டது.

ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, விவசாய அணி செயலர் முருகேசன், விவசாய அணி மாவட்ட தலைவர் சம்பத்குமார், வட்டார தலைவர் புவனேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News