குமாரபாளையத்தில்'குடி' மகன்கள் ஆட்டம்; பொதுமக்கள் திண்டாட்டம்

குமாரபாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2021-07-28 15:15 GMT

குமாரபாளையம்,  சேலம் சாலை பள்ளிபாளையம் பிரிவு பகுதியில், பழைய முருகன் தியேட்டர் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது பற்றி, குமாரபாளையம் பகுதி பொதுமக்களில் சிலர் கூறியதாவது: குமாரபாளையத்தில்,  சேலம் சாலை பள்ளிபாளையம் பிரிவு பகுதியில், பழைய முருகன் தியேட்டர் இருந்த இடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. காட்டூர், விட்டலபுரி, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வழியும் இதுதான். இவ்வழியே பெண்கள் உள்ளிட்ட சிறுமியர், தங்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்வது வழக்கம்.

இந்த டாஸ்மாக் மதுக்கடையில், பார் வசதி இல்லாததால் மதுபானங்கள் வாங்கும் நபர்கள்,  கடையின் முன்பு கீழே உட்கார்ந்து மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில், பலர் இவ்வழியே செல்லும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதும், பேசுவதுமாக இருந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

இதுபோன்ற நபர்களால், பொதுமக்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகி வருகிறார்கள். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு,  இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News