தமிழ் புத்தாண்டு: ஐயப்பன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு

குமாரபாளையத்தில் ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் தமிழ்புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது;

Update: 2023-04-14 12:45 GMT

தமிழ்ப் புத்தாண்டு நாளையொட்டி குமாரபாளையம் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் பெருமளவில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

குமாரபாளையத்தில் ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில்தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

தமிழ்ப் புத்தாண்டு நாளையொட்டி குமாரபாளையம் அம்மன் நகர் ஐயப்பன் கோவில், கோட்டைமேடு காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. இதே போல் சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மம் கோவில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

குமாரபாளையம் சாய்பாபா கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு.

குமாரபாளையம் பூலக்காடு பகுதியில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன.சாய்பாபா புகழ் பாடும் பஜனை பாடல்களை பக்தர்கள் பாடினர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

கோவில் வளாகம் முழுதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. குமாரபாளையம் நில முகவர்கள் சங்கத்தார் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டன. குமாரபாளையம், பள்ளிபாளையம், சானார்பாளையம், குப்பாண்டபாளையம், வேமன்காட்டுவலசு, சத்யா நகர், எம்.ஜி.ஆர். நகர், பவானி,சங்ககிரி, வட்டமலை, கள்ளிபாளையம், உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து பக்தர்கள் பெருமளவில் திரண்டு வந்தனர்.

குமாரபாளையம் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வட்டமலை வேலாயுத சுவாமி கோவிலில் காவிரியிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டது. ஆயிரக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

காவல் நிலையம் அருகில் உள்ள பாலமுருகன் கோவிலில் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி அருள்பாலிக்க, காவடி பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இது போல் காளியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், நடன விநாயகர் கோயில், ராஜவிநாயகர் கோயில், அங்காளம்மன் கோயில், காசி விச்வேஸ்வரர் கோயில், மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வர் கோயில், கள்ளிபாளையம் முருகன் கோயில், மருதமலை முருகன் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.


Tags:    

Similar News