சித்திரையை வரவேற்க குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு பூஜை
சித்திரையை வரவேற்க குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு பூஜை;
புது வருடத்தை வரவேற்க குமாரபாளையம் மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். நாளை தமிழ் வருடப்பிறப்பு சித்திரை 1 தொடங்குகிறது.
சித்திரை மாதம் கோடை துவங்கினாலும், குதூகல மாதம் என்றே சொல்லலாம். ஆனால், கொரோனா பரவலால் கொண்டாட்டங்கள் களை இழந்து போய்விட்டன. சித்திரை என்றாலே தமிழகத்தில் திருவிழா களை கட்டும். கோவில் வளாகங்கள் கடைகளை சுமந்து நிற்கும்.
குமாரபாளையம் கோவில்களில் தமிழ் வருடப்பிறப்பு சித்திரை 1 அன்று சிறப்பு பூஜைகள் செய்ய தயார் செய்யப்பட்டு வருகின்றன. சிறிய கிராமங்களில் உள்ள சின்ன கோவில்கள் கூட பூஜைக்கு தயாராகி வருகின்றன.
மக்களும் வாசலில் வண்ண கோலமிட்டு சித்திரை அவளை வரவேற்க தயாராகிவிட்டனர். சித்திரை மகளே வருக. மக்களுக்கு சீர்மிகு வாழ்வை தருக.