பவானியில் தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் மண்டல ஆலோசனைக்கூட்டம்

திருக்கோவில் பணியாளர்கள் 1,500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது

Update: 2021-09-26 14:15 GMT

பவானியிவ் நடைபெற்ற தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் மண்டல கூட்டத்தில் பேசிய  யூனியன் தலைவர் இதயராஜன். 

தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் மண்டல கூட்டம்  பவானி பவிஷ் பார்க்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் மண்டல கூட்டம் யூனியன் தலைவர் இதயராஜன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  திருக்கோவில் பணியாளர்கள் ஆயிரத்து 500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்த தமிழக முதல்வருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பது.  ஈரோடு மாவட்டத்தில் கோவில்களில் பணியாற்றும்  ஊழியர்கள்  அங்கீகரிக்கப்பட்ட பணியிடத்தில் பணிபுரியவில்லை எனும் காரணத்தை காட்டி நிறுத்தி வைக்கப்பட்ட   ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

கோவில் பணியாளர்களின் முதல் மதிப்பெண் பெறும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த மடிகணினி திட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். கோவில்களின் மூலம் அமைக்கப்படும் கல்லூரிகளில் கோவில்களில் பணியாற்றும் குழந்தைகளுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 

இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தும் போது, தகுதியின் அடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். செயல் அலுவலர் பதவிக்கு கோயில் பணியாளர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தற்கால நிலவரத்திற்கு ஏற்பவும், வேலை பளுவுக்கு ஏற்ப புதிய பணியிடம் ஏற்படுத்த வேண்டும்  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் ராமதுரை, பூலுச்சாமி, மாநில துணை தலைவர்கள் சிவகுமார், குருராஜன், செயலாளர் ஆனந்தன், மாநில துணை அமைப்பாளர் நந்தகோபால், கணபதி, கோவை மண்டல தலைவர் சேஷையா, நாமக்கல் மாவட்ட செயலர் மதியழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


Tags:    

Similar News